முனிஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் தேவ் - கே வி துரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. பிரணவ் முனிராஜ் என்பவர் இசையமைத்துள்ள இப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்துள்ள விஜயலட்சுமி இப்படம் தான் தனது கடைசி படம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய விஜயலட்சுமி, “இடையில் நான் நடிக்காததற்கு காரணம் சரியாக கதாபாத்திரம் அமையவில்லை. இனிமேல் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளேன். இதுதான் என்னுடைய கடைசி படம். கடைசிப் படம் இவ்வளவு அழகான படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. அடுத்து வேற ஏதாவது செய்யலாம் என திட்டமிட்டு இருக்கிறேன்” என்றார்.
நடிகை விஜயலட்சுமி காதல் கோட்டை, நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் மகள் ஆவார். நடிகையாக சென்னை 600028 படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தயாரிப்பாளராகவும் கிருஷ்ணா நடித்த பண்டிகை படித்ததை தயாரித்திருந்தார். இடையில் தொலைக்காட்சி தொடர்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் மற்றும் பிக் பாஸ் சீசன் நான்கிலும் கலந்து கொண்டார். இப்போது திடீரென நடிப்பில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Follow Us