தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை பதிவு செய்து வந்தவர் இயக்குந விக்ரமன். அப்படி ஒரு படமாக அவர் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘உன்னை நினைத்து’. லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சூர்யா, லைலா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிற்பி இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. 

Advertisment

இந்த நிலையில் விக்ரமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜனநாயகன் படத்தில் ஆடியோ லான்ச்சை பார்த்தேன். நண்பர் விஜய், இதுதான் என்னுடைய கடைசி படம் என சொன்னார். அது உண்மையிலேயே வேதனைக்குறியது. இந்த நேரத்தில் எனக்கு பழைய நியாபகங்கள் வந்தது. அவரை வைத்து தான் உன்னை நினைத்து படத்தை ஆரம்பித்தேன். இரண்டு பாடல்களை படமாக்கினேன். மூனாரில் ‘என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா’ என்ற பாடலை ஷூட் பன்னேன். அதை வெளியிடுகிறேன். பாருங்கள்” என்றார். 

Advertisment

பின்பு விஜய்யும் லைலாவும் நடித்த அந்த பாடல் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோவின் பதிவில், “உன்னை நினைத்து படத்தில் இடம் பெற்ற "என்னை தாலாட்டும் "பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இந்த பாடலை விஜய்யை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன். அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய வீடியோ கேசட் ஓன்று கிடைத்தது. மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு போஸ்ட் செய்கிறேன். சூர்யாவின் தற்போதைய வீடியோவுடன் இந்த வீடியோவை ஒப்பிட வேண்டாம். இருவரும் சிறந்த கலைஞர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

விஜய்யின் இந்த பழைய வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாக்கப் பட்டு வருகிறது. அவரது கடைசி படம் ஜன நாயகன் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதால் அதை வரவேற்க காத்திருக்கும் ரசிகர்கள், இந்த படத்தோடு சினிமாவை விட்டு போவதால் வருத்தத்தோடும் இருக்கின்றனர். இந்த சூழலில் விஜய்யின் பழைய வீடியோக்கள் வெளியாகியிருப்பது அவர்களை நாஸ்டலாஜி மோடில் அழைத்து சென்றுள்ளது.    

Advertisment