கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் ‘உலகம் உங்கள் கையில்’. இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவர்களோடு நடிகர் விஜய் சேதுபதியில் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷம் பெருமையும் கூட. இந்த அரசு ரொம்ப காலமாகவே நம்மை படிக்க வைக்க திட்டம் தீட்டுகிறது. அடுத்த தலைமுறைக்கு வேறெதையும் கொடுப்பதை விட கல்வி மிகவும் அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அவரின் குடும்பம், அடுத்த தலைமுறையினர் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்கள். அதற்கு முக்கியமான பங்கை இந்த அரசு மீண்டும் மீண்டும் செய்கிறது.
ஒருத்தருடைய வளர்ச்சி என்பது அவருக்கு கிடைக்கும் அறிவின் மூலம் தான். அதன் வழியே தான் அவர் முன்னேறி போகிறார். அதற்கு எவ்ளோ தடைகள் வந்தாலும் அதை உடைத்து எரிந்து ஒருவரை முன்னேறி நகர்த்தி செல்வதில் இந்த அரசு பெரும் பங்குவகிக்கிறது” என்றார்.
Follow Us