Advertisment

‘ராமாயணா’ படத்தில் நடிக்கிறேனா? - விஜய் சேதுபதி விளக்கம்

20 (55)

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமயணா’ என்ற தலைப்பில் படம் உருவாகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.  

Advertisment

இதில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் கடந்த 2024ஆம் ஆண்டு இணையத்தில் கசிந்து வைரலானது. கடந்த ஆண்டு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னோட்டத்துடன் வெளியாகியிருந்தது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் லக்‌ஷ்மன் கதாபாத்திரத்தில் ரவி துபேவும் அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர்களாக ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இசையமைக்கின்றனர். ஸ்ரீதர் ராகவன் எழுதுகிறார். 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தில் ராவணன் தம்பி விபீஷணன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனால் ஜவான் படத்திற்கு பிறகு இவர் பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுவந்தது. ஆனால் இத்தகவலை தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “ராமாயணா படத்தில் நான் நடிக்கவில்லை. இது போன்ற வதந்தி எப்படி உருவாகிறது என தெரியவில்லை” என்றுள்ளார்.

Bollywood Ramayana actor vijay sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe