வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தாணு தயாரிக்கும் இப்படம் வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகிறது. அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் அறிவிப்பு புரொமோ வெளியானது. அதில் சிம்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் காட்சிகளும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கபடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை தள்ளி போகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் புதிதாக விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சிம்புவுடன் செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு இணைந்து நடிக்கவுள்ளார். அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை மற்றும் விடுதலை பாகம் 2 படங்களுக்குப் பிறகு நடிக்கவுள்ளார். இவர் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Follow Us