Advertisment

விஜய் சேதுபதி பட ஓடிடி அப்டேட்!

09 (39)

கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ், சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான படம் ‘காந்தி டாக்ஸ்’. கியூரியஸ் மற்றும் மூவிமில் நிறுவனங்கள் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் வசனங்கள் ஏதும் இல்லாமல் மௌனப் படமாக உருவாகியிருந்தது. 

Advertisment

இந்தப் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு கோவாவில் நடந்த 54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. 

Advertisment

அதன்படி ஜீ5 ஓடிடி தளத்தில் மார்ச் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெறாமல் போன இப்படம் ஓடிடி-யில் கவனம் பெறும் என படக்குழு எதிர்பார்க்கின்றனர். 

zee5 Tamil actor vijay sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe