விஜய் சேதுபதி நடித்த மவுன படமான ‘காந்தி டாக்ஸ்’ திரையிடப்பட்டது. கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ராவ், அரவிந்த சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ், சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘காந்தி டாக்ஸ்’. கியூரியஸ் மற்றும் மூவிமில் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வசனங்கள் ஏதும் இல்லாமல் மௌனப் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு அவ்வப்போது மட்டும் அப்டேட் வெளியாகி ரிலீஸ் ஆகாமல் இருந்தது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு கோவாவில் நடந்த 54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அதன் பிறகும் உடனடியாக ரிலீஸ் அப்டேட் வெளியாகவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 30ஆம் தேதி காந்தியின் நினைவு தினத்தன்று வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு ஒரு ப்ரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஜி ஸ்டுடியோஸ் உலகம் எங்கும் படத்தை வெளியிடுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/12-21-2026-01-03-18-11-04.jpg)