கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகிவுள்ள படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மென்டராக பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகியுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி, நெல்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் விஜய் சேதுபதி படக்குழுவினரை வாழ்த்தி பேசியிருந்தார். அப்போது ஆண்ட்ரியா குறித்து பேசுகையில், “நான் சின்ன வயசுல பீச்சில ஒரு சிலை பார்த்தேன். அப்ப ஆண்ட்ரியாவையும் பார்த்தேன். சிலையும் இப்போ அப்படியே இருக்கு. ஆண்ட்ரியாவும் அப்படியே இருக்காங்க. இதெல்லாம் எப்படின்னு ஃபாரின்ல இருந்து ஆளுங்க வந்து இன்டர்வியூ எடுக்கணும். 

Advertisment

சந்திராவை பார்த்த மாதிரியும் ஒரு விளம்பரத்தில் பார்த்த மாதிரியும் அப்படியே இருக்கீங்க. அப்பவும் யார்ரா அந்த பொண்ணுன்னு பார்த்தேன், இப்பவும் அப்படித்தான் பார்க்கிறேன். என் பையனும் அப்படித்தான் பார்ப்பான் போல. வீட்ல போயிட்டு பிரிட்ஜ்ல உட்காருவிங்களா இல்ல பெட் ரூம்ல போய் படுப்பீங்களா” என்றார். இவரது பேச்சு அரங்கத்தில் சிரிப்பலை ஏற்படுத்தியது.