அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது  ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

இப்படத்தில் இருந்து முதல் பாடலாக வெளியான ‘தளபதி கச்சேரி’ விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாடலாக ‘ஒரு பேரே வரலாறு’ வெளியாகி வரவேற்பை பெற்றது. மூன்றாவது பாடல் விஜய் குரலில் ‘செல்ல மகளே’ இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் ‘தளபதி திருவிழா’ எனும் பெயரில் ஒரு இசை கச்சேரியாகவும் நடக்கிறது. இதற்காக விஜய் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இன்று மலேசியா சென்றனர். 

Advertisment

இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான ‘செல்ல மகளே’ லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இப்பாடலை விஜய் பாடியுள்ள நிலையில் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இப்பாடல் ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்கேற்றார் போல், ‘கண்ணே... மணியே... கண்ணிமையே, என் கைக்குள்ளே மலர்ந்தவளே...’, ‘எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈடான என் உயிரே’ என எமோஷனுடன் விஜய் பாடும் வரிகள் இடம் பெற்றுள்ளது.