விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. 

Advertisment

முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. பின்பு விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் கிளிம்ஸ் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியானது. கிளிம்ஸில் விஜய் போலீஸ் அதிகாரியாக கையில் கத்தியுடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதுவும் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Advertisment

இந்த சூழலில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முன்னதாக வெளியான கிளிம்ப்ஸில் இடம் பெற்ற அதே முறுக்கு மீசை கெட்டப்பிலே தோன்றுகிறார். மேலும் அவரை சுற்றி ஒரு கூட்டம் அவரை தொட்டப்படியே நிற்கிறது. இந்த போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள படக்குழு ‘ஆரம்ப்பிக்கலாம்’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் புரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ள படக்குழு இனிமேல் தொடர் அப்டேட்டை வழங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.