Advertisment

மீண்டும் ரீ ரிலீஸாகும் கில்லி!

10 (61)

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாறியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.

Advertisment

இப்படம் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர்.

Advertisment

பின்பு ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படம் மீண்டும் ரீ ரிலீஸாகிறது. பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக விநியோகிஸ்தர் சக்தி ஃபில்ம் ஃபேக்ட்ரி தங்களது எக்ஸ் பக்கம் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். 

trisha actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe