அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் இருந்து இதுவரை ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’, ‘செல்ல மகளே’ ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கிறது. படக்குழுவினர் கலந்து கொள்ளும் முன் ‘தளபதி திருவிழா’ எனும் பெயரில் இசை கச்சேரி நடந்தது. இதில் விஜய்யின் ஹிட் பட பாடல்கள் அரங்கேற்றப்பட்டது.
இந்த நிலையில் விஜய் ப்ளூ கலர் கோட் சூட்டுடன் பங்கேற்றார். மேலும் அவரது வருகையின் போது ரசிகர்கள் அரங்கம் அதிர ஆரவாரம் செய்தனர். இப்போது பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். விஜய்யின் பேச்சிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
Follow Us