Advertisment

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் எப்போது? - வைரலான பத்திரிக்கை

11 (46)

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இருவரும் ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர். முதல் படத்தின் போதே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் காதல் குறித்து இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. கடந்த 2024ஆம் ஆண்டு இருவரும், சிங்கிள் இல்லை என தெரிவித்தனர். ஆனால் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை அவர்கள் சொல்ல மறுத்துவிட்டனர். இதனால் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது உறுதியானது. 

Advertisment

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த 43வது இந்தியா தின அணிவகுப்பில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். இது அவர்களின் காதலை உறுதி செய்யும் விதமாக அமைந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. ஹைதராபாத்தில் மணமக்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடனும் இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்பட்டது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி இருவருக்கும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் அரண்மனை ஹோட்டலில் திருமணம் நடக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாகவும் அதில் மணமக்களின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

celebrity marriages rashmika mandana vijay devarakonda
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe