அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியான படம் ‘மனசங்கர வரபிரசாத் காரு’. ஷைன் ஸ்கிரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் வெங்கடேஷ் கேமியோ ரோலிலும் கேத்ரின் தெரசா முக்கியமான ரோலிலும் நடித்திருந்தனர். பீம்ஸ் செசிரோலியோ என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் படக்குழு படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனங்களை தடுக்க ஒரு முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு தளங்களில் கொடுக்கப்படும் ரேட்டிங் மற்றும் பதிவிடப்படும் கருத்துகள் ஆகிய இரண்டினையும் செய்யாதபடி நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளது. பொதுவாக இந்த தளங்களில் கொடுக்கப்படும் ரேட்டிங் மற்றும் கருத்துகள் போலியானவை என சொல்லப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது படக்குழு. இந்த முன்னெடுப்பை விஜய் தேவரக்கொண்டா வரவேற்றுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த முன்னெடுப்பை கண்டு மகிழ்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது - பலரின் கடின உழைப்பையும் கனவுகளையும் பணத்தையும் ஒரு வகையில் பாதுகாக்கப்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் நம் சொந்த மக்களே இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள் என்ற யதார்த்தத்தைக் கண்டு வருத்தமாகவும் இருக்கிறது. 'வாழு, வாழ விடு' என்ற கொள்கைக்கும், அனைவரும் ஒன்றிணைந்து வளர்வோம் என்ற கொள்கைக்கும் என்ன ஆனது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/439-2026-01-12-16-09-24.jpg)
‘டியர் காம்ரேட்’ படத்தின் போதுதான், குறிவைக்கப்பட்ட தாக்குதல்களில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் அரசியலை முதல் முறையாக பார்த்தேன். இத்தனை ஆண்டுகளாக என் குரல், செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. ஒரு நல்ல படத்தை யாராலும் தடுக்க முடியாது என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால், அதன்பிறகு என்னுடன் படம் தயாரிக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் இயக்குநரும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டனர். இதுபோன்ற செயல்களைச் செய்யும் மனிதர்கள் யார், பலரின் கனவுகளைப் பாதுகாக்க அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து பல இரவுகள் நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். இப்போது இது வெளிப்படையாகியிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெரிய நடிகர்களின் படங்களுக்குக் கூட அச்சுறுத்தலை இருக்கும் என்பதை நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இது இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வு இல்லை. ஆனால் நம் கவலையை இது குறைத்திருக்கிறது” என்றார்.
Follow Us