விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் இன்று பிப்.26ஆம் தேதி உதய்பூரில் நடந்தது. இதில் குடும்ப உறவினர்கள் மற்றும் மணமக்களின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இன்று காலை 10.10 மணிக்கு விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனாவை கரம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் தேவரக்கொண்டாவின் பூர்விகமான தெலுங்கு முறைப்படி நடந்திருக்க மாலை ராஷ்மிகாவின் பூர்விகமான ‘கொடவா’ முறைப்படியும் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமண வரவேற்பு மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.
இந்த நிலையில் திருமண புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் புது தம்பதிகள். அப்புகைப்படங்களை பகிர்ந்து மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டுள்ளனர். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/26/10-68-2026-02-26-19-29-22.jpg)