அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் படம் சிறை. இப்படத்தில் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். இவரோடு விக்ரம் பிரபு, அனிஷ்மா, அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஜஸ்டின் பிரபாகரன். இப்படத்திற்கு டாணாக்காரன் பட இயக்குநர் கதை எழுதி சுரேஷ் ராஜகுமாரியுடன் திரைக்கதையும் எழுதி இருக்கிறார். மேலும் உண்மை சம்பவ கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. 

Advertisment

இப்படம் நாளை(டிச.25) கிறிஸ்மஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி இப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்புள்ள லலித் சார், சிறை திரைப்படத்தைப் பார்த்தது எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. உங்கள் மகன் அக்‌ஷய் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. வழக்கம் போலவே, விக்ரம் பிரபு தனது கண்ணியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், மேலும் அவர் திரையில் உண்மையிலேயே கலக்கியிருக்கிறார்.

Advertisment

அறிமுக இயக்குநருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் உங்கள் நிறுவனத்திற்கு ஒரு பெருமைமிக்க சாதனையாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கும், 'சிறை' திரைப்படத்தின் பின்னணியில் உள்ள முழு குழுவினருக்கும் பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.