Advertisment

‘உடைந்து விடும் சூழலில் சிவராஜ்குமார் செய்த செயல்’ - தலைவணங்கிய விஜய் ஆண்டனி

18 (41)

சுராஜ் புரொடக்‌ஷன் தயாரிப்பில் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘45’. இப்படத்திற்கு பட இயக்குநர் அர்ஜூன் ஜான்யாவே இசையும் அமைத்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ்ப்பதிப்பு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் விஜய் ஆண்டனி பேசியதாவது, “சிவாண்ணாவின் ரசிகன் நான். அவர் மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் அதை வெளியில் எங்கும் காட்டிக்கொள்ள மாட்டார். அவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அவருக்கு கேன்சர் வந்தது. இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எல்லோரும் உடைந்து விடுவோம், குடும்பத்தோடு இருக்க ஆசைப்படுவோம். ஆனால் சிவாண்ணா தயாரிப்பாளரை அழைத்து, இன்னும் மீதமுள்ள ஷூட்டிங்கை முடித்து விடுங்கள், டப்பிங் எடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பிற்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்.

Advertisment

உபேந்திராவுடன் ஒரு படத்தில் வேலை செய்துள்ளேன். அவர் இயக்கத்திற்கு நான் ரசிகன். ராஜ் பி. ஷெட்டியின் சமீபத்திய படங்கள் அற்புதமாக இருக்கின்றன. அவர் தமிழில் படம் செய்ய வேண்டும். 20 வருடம் இசையமைப்பாளராக இருந்த அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். டிரெய்லர் பார்த்தேன், அட்டகாசமாக இருந்தது. நிறைய சிஜி இருந்தது. தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார். 

shiva rajkumar vijay antony
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe