2021ஆம் ஆண்டு வெளியான ‘ஹாட்ஸ்பாட்’ படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கே இயக்கியுள்ளார். இதில் பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷ்ன், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி உள்ளிடோர் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் வழங்கியுள்ள இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். 

Advertisment

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்திருந்தனர். அந்த வகையில்  இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், பவானி ஸ்ரீ குறித்து பேசுகையில், “என்னுடைய முதல் படம் எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை. அந்த படத்தின் பெயர் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. இந்த படம் அறியாத வயதில் தெரியாமல் எடுத்தது. இப்படம் மிகப்பெரிய தோல்வி. இதனால் நிறைய பாதிப்புகளும் அசிங்கங்களும் வந்தது. அதை மாற்ற வேண்டுமென, ‘யூவர்ஸ் ஷேம்ஃபுல்லி’ குறும்படத்தை எடுத்தேன். அதன் பிறகு என்னுடைய கரியர் மாறிவிட்டது. அதனால் அந்த படத்தை அழித்து விடலாம். அந்தப் படத்தை தயாரித்தது பவானி ஸ்ரீயின் அம்மா ஏ ஆர் ரைஹானா. 

Advertisment

இப்படி ஒரு படத்தை கொடுத்து விட்டு ஏ ஆர் ரைஹானாவின் மகனான ஜிவி பிரகாஷை வைத்து அடியே படம் எடுத்தேன். அதுவே எனக்கு ஒரு பயங்கர சந்தோஷமாக இருந்தது. அடியே படம் வசூல் ரீதியாக நல்ல ஹிட். அதன் பிறகு பவானி ஸ்ரீயிடம் கதை சொன்னேன். கதை கேட்டு அவர், ‘எங்க ஃபேமிலில ரஹ்மான் சாரை தவிற நீங்க யாரையும் விடல’... அப்படின்னு சொன்னார். அதனால் ரஹ்மான் சாருடன் இணைந்தால் நல்லா இருக்கும்” என்றார். 

பின்பு அஸ்வின் குறித்து பேசுகையில், “அவர் முதல் படத்தில் ஆடியோ லாஞ்சில் பேசிய 40 கதை பேச்சைக் கேட்டு அவரை திட்டிய பல பேரில் நானும் ஒருவன். எப்படி இப்படி பேசலாம் என கண்டபடி திட்டி இருக்கேன். ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தைக்கே அவரிடம் பேசினோம். அப்போது அவர் நடிக்க முடியாமல் போனது. இது அவர் அந்த ஆடியோ லாஞ்ச் பேச்சுக்கு முன்னாடி நடந்தது. ஆனால் இந்தப் படத்துக்கு இவரை யோசித்தபோது, அவரை ஏற்கனவே கண்டபடி திட்டி விட்டு எப்படி கேட்பது என ஒரு தயக்கம் இருந்தது. பரவாயில்லை என கேட்டு பார்த்தோம். அவரும் நடிக்க ஒத்துக்கொண்டார். அப்போது அவரை திட்டியது தொடர்பாகவும் தெளிவாக சொல்லிவிட்டேன். அவருடைய நேர்மை எனக்கு ரொம்ப பிடித்தது. அவர் பார்ப்பதற்கு தான் சீன் போடுகிற மாதிரி இருக்கும். ஆனால் பழகுவதற்கு அப்படி இல்லை” என்றார். 

Advertisment