Advertisment

“அரசியல் ரீதியான தவறுகள் ஆடுகளம் படத்தில் நிறைய இருக்கிறது” - வெற்றிமாறன்

19

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியான ஆடுகளம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 6 தேசிய விருதுகளை தட்டி சென்றது. இப்படம் வெளியாகி 14ஆண்டுகள் ஆகும் நிலையில் எழுத்தாளர் ம.தொல்காப்பியன் படம் தொடர்பாக ‘ஆடுகளம் காட்சிய நுட்பம்’ மற்றும் ‘அதிர்விகளும் காட்சிமையும் EFFECTS & CINEMA LANGUAGE’ என்ற இரு நூல்களை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா வெற்றிமாறன் கலந்து கொள்ள நடைபெற்றது. 

Advertisment

மேடையில் வெற்றிமாறன் பேசுகையில், “ஒருமுறை தொல்காப்பியன் என்னிடம் ஆடுகளம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதுகிறேன் என்றார். உடனே நானும் ஓகே சொல்லிவிட்டேன். ரொம்ப காலம் எழுதி வந்தார். நாம் இயக்கிய படம் ஒருவருக்கு புத்தகம் எழுத வைத்திருக்கிறது என்றால் படம் கொடுத்த தாக்கம் தான் காரணம். இதற்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது. படம் தொடர்பாக அவருடைய நுன் உணர்வுகளை அவர் சொல்கிறார். அதனால் அவர் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். 

Advertisment

ஒரு படம் எடுக்கும் வரை அது நம்முடைய கையில் இருக்கிறது. அது வெளியான பிறகு நம் கையில் எதுவும் இல்லை. அது எந்த போக்கில் போகிறதோ அப்படியே விட்டு விடவேண்டும். படத்தில் வரும் கிளைமேக்ஸ் ஷார்ட் இப்போது எடுக்க முடியுமா என தெரியவில்லை. அப்போது ஏதோ ஒரு தைரியத்தில் எடுத்து விட்டோம். இந்த ஒரு எண்ணம் அந்த படத்தின் மீது எப்போதும் எனக்கு இருக்கும். அந்த காலகட்டத்தில் அந்த படத்தில் அரசியல் ரீதியான சில விஷயங்கள் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த காலகட்டத்தில் நிறைய விஷயங்கள் தவறு. அதை விமர்சனத்திற்கு உட்படுத்துவதுதற்கு நான் எப்போதுமே தயார். விமர்சனத்தில் இருந்து கற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்ளவும் தயார். குறிப்பாக ஒரு பாடலில் வரும் வரிகள் இல்லாமல் இருந்திருக்கலாம் என தோன்றும். 

இந்தப் படம் ரிலீஸான சமயத்தில் பொல்லாதவன் படம் அளவிற்கு இல்லை என்று நிறைய பேர் சொன்னார்கள். அதே போல் நன்றாக இல்லை என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால் சர்வதேச அளவில் படம் கவனம் பெற்று தேசிய விருது  வாங்கிய பிறகு நல்ல படம், ஆனால் எனக்கு ஒர்க் ஆகவில்லை என்றார்கள். இது போன்று மாறி மாறி பேசுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் ஆடுகளம் படம் அரசியல் ரீதியான நிறைய குறைகள் இருக்கும் படம் தான். அடை ஒத்துக் கொள்கிறேன்” என்றார். 

Movie Vetrimaaran,
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe