வெற்றிமாறன் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அமித் திரிவேதி இசையமைத்திருந்த இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வெற்றிமாறனோடு இணைந்து வழங்கியிருந்தார். இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியான போது இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/28/19-6-2025-10-28-15-43-25.jpg)
இதைத் தவிர்த்து இப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. சர்ச்சையில் சிக்கி பின்பு ஒரு வழியாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 4ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
Follow Us