Advertisment

“அமைதியானாலும் வெடிக்கும்...” - ‘பைசன்’ குறித்து வெற்றிமாறன்

09 (1)

மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Advertisment

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் இன்று (24.10.2025) தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனிடையே இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.35 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ரஜினிகாந்த் தொடங்கி, இயக்குநர்கள் சேரன், வசந்த பாலன், நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன், நந்தா பெரியசாமி உள்ளிட்டோர் வரை பாராட்டு தெரிவித்தன. அனைவருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.  

Advertisment

இந்த நிலையில் வெற்றிமாறன் இப்படத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக படக்குழு தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட பதிவில், “பைசன் உறுதியையும் எதிர்ப்பையும் பிரதிபவிக்கும் ஆழமான தியானம். துருவ் விக்ரம் அளிக்கும் இயல்பான, மறக்க முடியாத நடிப்பு சக்திவாய்ந்த உவமைகளால் நிறைந்துள்ளது. வலிமை மற்றும் உயிர்வாழ்வின் அடையாளமாக பைசனின் எலும்புக்கூடு, மரியாதைக்கான போராட்டமாக கபடி, தடங்களால் மறைக்கப்பட்ட பாதைகளில் ஓடும் பயணம் அனைத்தும் இடையறாத போராட்டத்தை வெளிப்படுத்துகின்றன. அமைதியானாலும் வெடிக்கும் பைசன், கிட்டனின் அடக்கி வைத்த கோபத்தை பிரதிபலிக்கிறது; கருப்பு-வெள்ளை மற்றும் நிறம் மாறும் காட்சிகள் இழப்பு, நினைவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன” என வெற்றிமாறன் பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

Bison dhruv vikram mari selvaraj Vetrimaaran,
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe