Advertisment

“கோல்டு செயின் கொடுக்கலாம்...” - தவறை கண்டுபிடித்த ரசிகருக்கு வெங்கட் பிரபு ரிப்ளை

11 (54)

வெங்கட் பிரபு இயக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் சரோஜா. இப்படத்தில் மிர்ச்சி சிவா, எஸ்பி சரண், பிரேம்ஜி, வைபவ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் காஜல் அகர்வால், ஜெய் உள்ளிட்ட பலர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். ஒரு இரவில் நடக்கும் கதைக்களத்தை கொண்ட இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisment

இந்த நிலையில் படம் குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் பதிவிட்டிருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது படம் ஒரு நாள் இரவில் நடப்பதால் மதியம் 12 மணி ஒரு காட்சியில் குறிப்பிட்டிருப்பதாக அதன் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்திருந்தார். இதற்கு செந்தில் சிரிக்கும் ரியாக்ஷனை வெங்கட் பிரபு பதிவிட்டிருந்தார். இதனை மற்றொரு பயனர் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்க அதற்கு கமெண்ட் செய்த வெங்கட் பிரபு, “ரிலீஸ் ஆன போதே கண்டுபிடிச்சிருந்தா ஒரு கோல்டு செயின் கொடுத்திருக்கலாம்... 18 வருஷம் கழிச்சிங்கறதால...” எனக் குறிப்பிட்டு சிரிப்பு எமோஜியை பகிர்ந்திருந்தார். 

Advertisment

fans twitter venkat prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe