மலையாளத்தில் ராப் பாடகராகப் புகழ் பெற்றவர் வேடன். சமீபகாலமாக ‘மீ டு’ சர்ச்சை, போதைப்பொருள் சர்ச்சை, அரசியல் கருத்து சர்ச்சை என தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டார். தமிழில் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் வெளியான பைசன் படத்தில் ‘ரெக்க’ பாடலை பாடியிருந்தார். இதையடுத்து இசையமைப்பாளராக இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதுப் படத்தில் பணியாற்றி வருகிறார். 

Advertisment

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான நவமி லதாவை கரம் பிடித்துள்ளார். எளிய முறையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ள இவரது திருமணம் நடைபெற்றது. பின்பு கேரளா திரிசூரின் உள்ள செம்புக்காவு பதிவாளர் அலுவலகத்தில் தனது திருமணத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலமைப்பை சாட்சியாக வைத்து திருமணத்தை நடத்தத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த முடிவு எங்களின் எதிர்கால குழந்தைகளுக்கு பயனளிக்கும்” என்றார். இந்த புது தம்பதிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.   

Advertisment