நடிகை வரலட்சுமி சரத்குமார் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ள படம் ‘சரஸ்வதி’. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். இவரோடு பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ‘சரஸ்வதி’ எனும் தலைப்பில் உருவான இப்படம் ‘எஸ்.சரஸ்வதி’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது. இதற்கு சென்சார் போர்டில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது படத்தை பார்த்த சென்சார் வாரியம் சரஸ்வதி என்பது கடவுளின் பெயர் என ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் அதன் காரணமாகவே படக்குழு சரஸ்வதிக்கு முன் எஸ் என்ற வார்த்தையை சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக சென்சார் வாரியம் படத் தலைப்பில் கடவுளின் செண்டிமெட்ண்டை பார்ப்பது அதிகரித்து வருகிறது.
மலையாளத்தில் கடந்த ஆண்டு சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான ‘ஜானகி வி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’ படம் இதே போல் பிரச்சனயை எதிர்கொண்டது. அதாவது முதலில் இப்படம் ‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’ என்ற பெயரில் உருவாகியிருந்தது. ஆனால் சென்சாரில் டைட்டில் ரோலான ஜானகி என்ற பெயர், கடவுள் பெயரான சீதாவின் பெயரோடு நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கதாபாத்திரத்திற்கு இந்த பெயர் வைத்திருப்பது மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் எனவும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனால் பெயர் மாற்றப்பட்டது. இதே போல தெலுங்கில் கடந்த மாதம் வெளியான ‘ஹே பல்வநாத்’ படமும் பிரச்சனை சந்தித்தது. முதலில் இப்படத்திற்கு ‘ஹே பகவான்’ என பெயரிட்ட நிலையில் சென்சாரில் ஆட்சேபனைக்கு உட்பட்டு தலைப்பு மாற்றப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/390-2026-03-06-15-24-33.jpg)