பாஜக மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான எச்.ராஜா, சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்தார். அதனால் அவரை உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். பின்பு உயர் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

Advertisment

இந்த நிலையில் எச்.ராஜா குணம் பெற வேண்டி பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “உடல் நலக் குறைவு என்பது உலக நியதி. யாருக்கும் எப்போதும் எதுவும் நேரலாம். அது எள்ளி நகையாடும் பொருளன்று பரிவு காட்டுவது பண்பாடு; நலம்பெற வாழ்த்துவது
நாகரிகம்.

Advertisment

பா.ஜ.க தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா உடல்நலக் குறைவு கண்டிருப்பது உள்ளத்திற்கு அதிர்ச்சி தருகிறது. அவர் விரைவில் நலமுறவும் விரும்பிய பணிகளை ஆற்றி வரவும் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டின் கதகதப்பான அரசியலுக்கு அவரும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.