பாடலாசிரியர் வைரமுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் தொடர்ந்து சினிமா, அரசியல், இலக்கியம் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சினிமாவில் அவர் எழுதி படத்தில் இடம் பெறாத பாடல் ஒன்று தற்போது வேறொரு படத்தில் இடம் பெறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

Advertisment

“ஆயிரத்தொரு பாடல்கள்
தொகுப்புப்பணி
தினம்தினம் தீவிரப்படுகிறது

நல்லதொரு செய்தி
நண்பர்களே!

எழுதி இசையமைக்காத
சில பாடல்களும்,
இசையமைத்து வெளிவராத
பல பாடல்களும்
இந்தத் தொகுப்பில் அடக்கம்

Advertisment

அவற்றுக்குள்
இலக்கியமும் இருக்கும்

அஜித் நடித்த
‘பரமசிவன்’ படத்தில்
நான் எழுதிக்கொடுத்து
இடம்பெறாமல்போன
பாடல் ஒன்று இடம்பெறுகிறது

அதைப்
பசிக்காகவும் ருசிக்காகவும் 
பந்திவைக்கிறேன்

“தேசியக் கொடியே
வணக்கம் - என்
தேசம் உனக்குள் இருக்கும்

உன்னில்
மூன்று வண்ணங்கள்
ஜொலிக்கும் - அது
மூன்று பொருள்களைக்
குறிக்கும்

இந்து மதத்தின் 
குறியீடாகும்
காவிநிறம் 

கிறித்துவ மக்களின் 
அடையாளம்தான்
வெள்ளை நிறம்

இஸ்லாமியரின் 
வண்ணச் சின்னம்
பச்சை நிறம்

மூவரும் இந்தியர் 
என்பவன் மட்டும்
இந்தியாவிலே இரு  - ஒரு
மூலையில் புகுந்து 
கலவரம் செய்தால்
இந்தியாவில் நீ எரு” எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் பாடல் இடம் பெறும் படம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment