கவிஞர் வைரமுத்து திருப்பூரில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது சென்சார் பிரச்சனை தொடர்பான கேள்விக்கு, “நான் ஏற்கனவே சொன்னேன். அரசியலில் கலை இருக்கலாம். கலையில் அரசியல் இருக்கக் கூடாது. தணிக்கை துறையில் இப்போது என்ன நடக்கிறது என்பதை எங்களால் முற்றும் உணர முடியவில்லை. காலப்போக்கில் உண்மைகள் தெரிய வரலாம்” என்றார். 

Advertisment

பின்பு ஏதாவது ஒரு நூலில் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “என்னுடைய 28 வயது வரைக்கும் வாழ்க்கையில் நடந்ததை ‘இதுவரை நான்’ எனும் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். இப்போது எனக்கு 72 வயது. அதனால் மீதமுள்ள வாழ்க்கையை இதுவரை நான் இரண்டாம் பாகத்தில் எழுதலாமா என யோசித்து வருகிறேன். அப்படி எழுதினால் நிறைய அரசியல், கலை, வாழ்வியல், மற்றும் சமூக வரலாறு... அதோடு திரைப்படப் பாடல்கள் என எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, பார்க்கலாம்” என்றார். 

Advertisment

தேர்தல் தொடர்பான கேள்விக்கு, “வரும் தேர்தல் களம் எல்லோருக்குமே கடுமையாக இருக்கும் என தோன்றுகிறது. அதனால் உண்மை வெல்ல வேண்டுமென்பது என்னைப் போன்றவரின் சிந்தனையாக இருக்கிறது” என்றார்.