கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படத்திற்கு எதிராக சொத்தாட்சியர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தொழிலதிபர் அர்ஜுன் லால் சுந்தர தாஸ் என்பவர் திவாலானவர் என சென்னை உயர்நீதி மன்றம் 2014ஆம் ஆண்டு அறிவித்தது. மேலும் அவருடைய சொத்துக்களை நிர்வாகிக்க சொத்தாட்சியரை நியமித்திருந்தது. அவரிடமிருந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்தத் தொகையை செலுத்த ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அவர் தயாரித்த வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது. 

Advertisment

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கடனை திருப்பி செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து படம் வெளியாகாமல் போனது. இந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரூ.3.75 கோடிக்கான டிடி-யை நீதிமன்றத்தில் செலுத்தினார். இதையடுத்து முழுக் கடனை செலுத்தினால் மட்டுமே பொங்கலுக்கு படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் படக்குழு வா வாத்தியார் படம் பொங்கலை முன்னிட்டு 14ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் அனைத்தும் சரியாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.