Advertisment

“பார்த்து வண்டியை ஓட்டணும்” - கிருத்திகா பதிவிற்கு துணை முதல்வர் உதயநிதியின் கமெண்ட்

360

சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் கிருத்திகா உதயநிதி, இதுவரை வணக்கம் சென்னை, காளி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இடையில் ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸையும் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடையில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்த நிலையில் தனது சமூக வலைதளத்தில் ‘செலிபிரிட்டி என்றால் என்ன’ என்பது குறித்து ஒரு பதிவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “செலிபிரிட்டி என்றால் என்ன?
இந்த நிலையில் தனது சமூக வலைதளத்தில் சினிமா தொடர்பாக அடிக்கடி பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் ‘செலிபிரிட்டி என்றால் என்ன’ என்பது குறித்து பதிவிட்டிருந்தார். அதில், “செலிபிரிட்டி என்றால் என்ன? நீங்களும் உங்களைப் பற்றிய மக்களின் பார்வையும்தான் உங்களை ஒரு செலிபிரிட்டியாக மாற்றுகிறது. ஆனால் மக்களின் பார்வை நான் தான் என நீங்கள் நினைத்தால், உங்களையே நீங்கள் இழந்து கடுமையான சிக்கலுக்குள் மாட்டிக்கொள்வீர்கள்” என்றிருந்தார்.

Advertisment

இதனை யாரை குறிப்பிடுகிறார், எதற்காக குறிப்பிடுகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஒரு சிலர் தவெக தலைவர் விஜய்யை தான் குறிப்பிடுவதாக அவரது பதிவின் கீழ் கமெண்ட் செய்தனர். அதாவது விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட நிலையில் திடீரென த்ரிஷாவுடன் ஒரு திருமணத்தில் விஜய் கலந்து கொண்டது பேசு பொருளான நிலையில் இதைத்தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என யூகித்தனர். 

கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவு பலராலும் கவனம் பெற்ற நிலையில் அந்த பதிவிற்கு தற்போது கிருத்திகா உதயநிதியின் கணவரும் துணை முதல்வருமான உதயநிதி கமெண்ட் செய்துள்ளார். அதாவது கிருத்திகா உதயநிதி பைக் ஓட்டும் ஒரு வீடியோவை பகிர்ந்து, “நீங்கள் ஒரு பெரிய செலிபிரிட்டியாக இருக்கலாம். ஆனால் வண்டியை பாத்து ஓட்டணும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Udhayanidhi Stalin kiruthiga udhayanidhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe