இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியாகின. அத்தனை படங்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தது ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’. அரசியல் கதைகளத்தில் காமெடி ஜானரில் வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தினை நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ளார். இளவரசு, தம்பி ராமையா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
இப்படத்தைக் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். படம் வெளியானதிலிருந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில் படக்குழுவினர் ரசிகர்களுக்கு தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். அதே நேரத்தில், படத்தின் 25வது நாளை முன்னிட்டு ரசிகர்களுடன் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் விதமாக, பரிசுகளை வழங்கும் அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தைத் தயாரித்துள்ள ‘கண்ணன் ரவி குரூப்ஸ்’ தனது எக்ஸ் தளப்பதிவில், ‘வருகின்ற சனிக்கிழமை (07-02-26) அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்குப் படம் பார்க்க வரும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு வேட்டி சட்டையும், பெண்களுக்கு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது. இது அனைத்து காட்சிகளுக்கும் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
Follow Us