தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே. தமிழைப் பொறுத்தவரை தற்போது விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக இன்னும் வெளியாகவில்லை. இதை தவிர்த்து லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தாண்டி இந்தியில் வருண் தவானுடன் ஒரு படமும் தெலுங்கில் துல்கர் சல்மானுடன் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார். 

Advertisment

இந்த நிலையில் இவர் ஒரு நடிகரை அறைந்ததாக கூறும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அவர், ஒரு பான் இந்தியா படத்தில் நடித்த போது ஒரு பெரிய ஹீரோ அவருடைய அனுமதியின்றி கேரவனில் நுழைந்து அத்துமீற முயன்றதாகவும் உடனே இவர் அவரை அறைந்து விட்டதாகவும் பின்பு அந்த நடிகர் பூஜாவுடன் பணி புரியவில்லை என்றும் அந்த தகவலில் குறிப்பிட்டிருந்தது. 

Advertisment

இந்த நிலையில் அந்த தகவல் பொய் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதைப் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்