Advertisment

“முட்டாள்தனம், அறிவில்லாத கொடூரப் பேச்சு...” - நடிகர் பார்த்திபனுக்கு திரிஷா கண்டனம்!

parthibantrisha

Trisha condemns actor Parthiban

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா அண்மையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.  

Advertisment

இதனிடையே, கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற சினிமா தயாரிப்பாளரான கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழாவில் தவெக தலைவர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஒன்றாக வந்து பங்கேற்றார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்த திருமண விழாவிற்கு விஜய்யும், திரிஷாவும் ஒரே காரில் வந்திறங்கிய வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் சொந்த கட்சி தொண்டர்களே விஜய்யை இந்த விவகாரத்தில் எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பார்த்திபனிடம், நடிகைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பார்த்திபன், “இந்த குந்தவையை கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே குந்தவைச்சா பிரச்சனை வராது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. எல்லா கவிதைகளையும் ரசிக்க முடியும், சில கவிதைகளை வெளிப்படையாக வாசிக்க முடியாது’ என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பார்த்திபனுக்கு நடிகை திரிஷா மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஒரு நபர் தனது உதவியாளர் மூலம் தெரிவித்த வேண்டுகோளின் பேரில் எனது பெயரும், படமும் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதாக சமீபத்திய ஒரு நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒரு கருத்தை புத்திசாலித்தனமாகவோ அல்லது நகைச்சுவையாகவோ ஒரு மைக்ரோஃபோன் சொல்ல முடியாது. அது முட்டாள்தனத்தை சத்தப்படுத்தி காட்டும். அறிவு இல்லாமல் பேசும் கொடூரமான வார்த்தைகள், அவை யாரை நோக்கிப் பேசப்படுகின்றன என்பதை விட, பேசுபவரைப் பற்றி அதிகம் கூறுகின்றன” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

ACTOR PARTHIBAN parthiban trisha vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe