சமீப காலங்களில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அப்படி வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில், விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா மற்றும் சமீபத்தில் வெளியான அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அமீர் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். மேலும் த்ரிஷாவும் நாயகியாக அறிமுகானார். மேலும், லைலா நந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல பெற்றிருந்தன. இப்படம் வெளியான அந்த காலகட்டத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இப்படம் தொடர்பாக அண்மையில் சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பட வசனங்களை அவர் பேசி ஒரு காட்சியாவது ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து லைலாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாவதால் இப்படம் சரியான நேரத்தில் வெளியாவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்ததாக அமீரும் வீடியோ வெளியிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் த்ரிஷா தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “என்னோட முதல் படம் மௌனம் பேசியதே ரீ ரிலீஸாகுது. கண்டிப்பா போய் பாருங்க. காதலர் தினம் என்பதால் இந்த வாரம் ஒரு ஸ்பெஷலான வாரம். இந்தப் படமும் எனக்கு எப்போதுமே ஸ்பெஷனான ஒன்னு. ஏன்னா இந்த படம்தான் என்னுடைய முதல் ரிலீஸ். இங்கிருந்துதான் எல்லாமே ஆரம்பிச்சது. அதனால என்னுடைய டீமுக்கு நன்றி. தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு மீண்டும் ஒரு வாழ்த்து, படம் ரீ ரிலிஸாவதால்.
அமீர் சாருக்கு ரொம்ப நன்றி. அவருடன் ஒர்க் பண்ணுனது ரொம்ப சந்தோஷம். என்னோட சினிமாவின் முதல் வருஷத்துல உங்களோட ஒர்க் பண்ணியிருக்கேன். இந்த டீமில் யாருமே என்னை ஒரு அறிமுக நடிகையா நடத்துனது கிடையாது. எங்க வீட்டுல இருக்குற மாதிரி தான் இருந்துச்சு. என்னுடைய முதல் படம் சூர்யாவுடன் வெளியானதுல ரொம்ப சந்தோஷம். என்னுடைய அடுத்த பட ரிலீஸூம் சூர்யாவுடன் தான். இது ஒரு முழுமை பெற்றதா உணர்றேன். யுவனின் இசை இப்போது வரையும் பிரபலமாக இருக்கிறது. லைலாவுடன் நடிச்சது மகிழ்ச்சி” என்றார். இவர் தற்போது சூர்யாவுடன் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/14-60-2026-02-12-15-36-59.jpg)