தமிழ் சினிமாவில் 22 வருடங்களுக்கு மேலாக பயணித்து வரும் த்ரிஷா, கடைசியாக கமலின் தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார். இப்போது சூர்யாவின் ‘கருப்பு’, தெலுங்கில் சிரஞ்சீவியின் விஷ்வம்பரா உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார்.
இதனிடையே 42 வயதை கடந்துள்ள த்ரிஷா திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் வருண் மணியனுடன் த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து திருமணம் குறித்து பேசிய த்ரிஷா, சரியான நபரைச் சந்தித்தால் மட்டுமே அதைப் பற்றி யோசிப்பேன் என்றும் ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை த்ரிஷா திருமணம் செய்யவுள்ளதாகவும் இருவரது குடும்பத்தினர் நீண்ட காலமாக நட்பில் இருப்பவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் த்ரிஷா, “எனக்காக என் வாழ்க்கையை மக்கள் திட்டமிடுவது பிடித்திருக்கிறது. அதே மக்கள் என் தேனிலவையும் திட்டமிடுவார்கள் என காத்திருக்கிறேன்” என தனது இன்ஸ்டர்கிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.