மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘ட்ரெயின்’ படத்தை இயக்கி வருகிறார். படப் பணிகள் நடந்து வருகிறது. தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியை தவிர்த்து நாசர், ஸ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் மிஷ்கினே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
படத்தின் கதையை மிஷ்கின் கடந்த மே மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார். அதாவது வாழ்கையை வெறுத்த நாயகன் கடைசியாக தன்னுடைய மனைவியின் கல்லறையில் ஒரு செடி நட ரயிலில் பயணிக்கிறான். அப்போது நடக்கும் விஷயங்களால் நாயகனுக்குள் மாற்றம் ஏற்பட்டு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் கற்றுக் கொள்கிறான் என்பதை அடிப்படையாக வைத்து உருவாகிறது.
சமீபத்தில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை விற்றகாமல் இருந்ததாகவும் அதனால் திரையரங்க வெளியீட்டுக்கு பிறகு யூட்யூபில் வெளியிட தயாரிப்பாளர் தானு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இப்படத்தில் இருந்து பட நடிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து மட்டுமே வெளிவந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் பிறந்தநாள் வீடியோவில் ‘கன்னக்குழிக்காரா’ எனும் பாடல் இடம் பெற்றிருந்தது. இதை ஸ்ருதிஹாசன் பாடியிருந்தார். இந்த நிலையில் இப்பாடல் படத்தின் முதல் பாடலாக நாளை வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/12-19-2025-12-22-19-55-44.jpg)