'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி மும்பை, கர்நாடகா என பல்வேறு இடங்களில் நடந்தது.
இப்படத்தில் இருந்து கடந்த ஆண்டு யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ஆம் தேதி வாழ்த்து வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் போதைப்பொருள் மற்றும் மது அருந்தும் கிளப்பிற்கு யஷ் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகும் போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் மற்றும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் யாஷின் கதாபாத்திர போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ அவரது பிறந்தநாளான கடந்த ஜனவரி 8ஆம் தேதி வெளியானது. அந்த வீடியோவில், கவர்ச்சியுடன் கூடிய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது வரவேற்பையும் சில விமர்சனத்தையும் சந்தித்தது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதிலும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மற்றும் அதீத வன்முறை இடம் பெற்றிருந்தது. இதனால், இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே டீசரில் இன்னொரு கெட்டப்பில் தோன்றியிருந்தார் யஷ். இது பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் அக்கதாபாத்திர் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ‘டிக்கெட்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு யஷ் ராயா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us