'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி மும்பை, கர்நாடகா என பல்வேறு இடங்களில் நடந்தது. 

Advertisment

இப்படத்தில் இருந்து கடந்த ஆண்டு யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ஆம் தேதி வாழ்த்து வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் போதைப்பொருள் மற்றும் மது அருந்தும் கிளப்பிற்கு யஷ் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகும் போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் மற்றும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisment

இப்படம் குறித்து பல மாதங்களாக அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் சமீப வாரங்களில் கதாப்பாத்திர போஸ்டர் மற்றும் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. முதலில் கியாரா அத்வானி போஸ்டர் வெளியிடப்பட்டது. இவர் நடியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஹூமா குரேஷி, எலிசபெத் என்ற கதாபாத்திரத்திலும் நயன்தாரா, கங்கா என்ற கதாபாத்திரத்திலும் ருக்மிணி வசந்த், மெல்லிசா என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு அவர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் யாஷின் கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதோடு அதன் அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அவரது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இதனை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், கல்லைறையில் மகனுடைய உடலை நல்லடக்கம் செய்ய வில்லன் மற்றும் அவருடைய கேங், இருக்கின்றனர். அப்போது, திடீரென நிறைய கார்கள் அங்கு வர, ஒரு கார் மட்டும் மரத்தில் மோதி நிற்கிறது. உடனே வில்லன் கேங்க் அல்ர்ட்டாக அந்த காரில் இருந்து ஒரு வயதான ஆள் மது போதையில் வெடிகுண்டை கனெக்ட் செய்கிறார். அது வெடிப்பதற்கு முன் தடுக்கும் வில்லன் கேங், கடுமையாக துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். ஆனால் காரின் உள்ளே யாஷ் இருக்கிறார். உள்ளே இருந்து கொண்டே அந்த குண்டை வெடிக்க வைத்து வெளியே மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார். பின்பு வில்லன் கேங்கை முழுவதும் சுட்டு தள்ளிவிட்டு, ‘டாடிஸ் ஹோம்’(DADDY'S HOME) என்ற வசனம் பேச, அதோடு முன்னோட்டம் முடிகிறது. இந்த முன்னோட்டம் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

Advertisment