சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் 90 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் தொடர்பாக ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், நானி உள்ளிட்டோர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டியிருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து அபிஷன் ஜீவந்த் நாயகனாக உருவெடுத்தார். இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட பணிகள் நடந்துள்ளது.  

Advertisment

இந்த நிலையில் அபிஷன் ஜீவந்துக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. முன்னதாக டூரிஸ்ட் ஃபேமிலி பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக தனது காதலியை அறிமுகப்படுத்தினார் அபிஷன் ஜீவந்த். அதாவது மேடையில் பேசிக் கொண்டிருக்கையில், மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த தனது காதலி அகிலாவை பார்த்து ‘வரும் அக்டோபர் 31ஆம் தேதி கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்டார். அவர் கேட்டதும் கீழிருந்த அவரது காதலி எமோஷனலாக கண்கலங்கினார். இந்த சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு டூரிஸ்ட் ஃபேமிலி பட தயாரிப்பாளர் மகேஷ், பிஎம்டபிள்யூ காரை திருமண பரிசாக அபிஷன் ஜீவனத்திற்கு வழங்கியிருந்தார். இந்த சூழலில் அபிஷந்த் ஜீவிந்த் தனது காதலி அகிலாவை இன்று கரம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புது மணத் தம்பதிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.