உலகளவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். குறிப்பாக பல ரிஸ்க் ஸ்டண்ட் காட்சிகளில் டூப்பே போடாமல் நடித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தைஉருவாக்கியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ‘மிஷன்: இம்பாசிபிள் 8’ படத்திலும் 8000 அடி உயரம் வரை ஏரோபிளேனில் டூப் போடாமல் பறந்திருந்தார். 

Advertisment

இந்த சூழலில் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இவரைத் தவிர்த்து ஹாலிவுட் நடிகை டெபி ஆலன், தயாரிப்பு வடிவமைப்பாளர் வின் தாமஸ் மற்றும் பாடகி டோலி பார்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. சினிமாவில் இவர்கள் ஆற்றிய அளப்பறிய அர்ப்பணிப்பிற்காக இந்த கௌரவம் என ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி குழு தெரிவித்தது. இந்த கௌரவ ஆஸ்கர் விருதை கவர்னர்ஸ் விருதுகள் என்றும் அழைக்கிறார்கள். இந்தாண்டு16வது கவர்னர்ஸ் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஓவேஷன் ஹாலிவுட்டில், ரே டால்பி பால்ரூமி அரங்கில் நடைபெற்றது. 

Advertisment

இதில் டாம் குரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இயக்குநர் அலெஜான்ட்ரோ விருதை வழங்கினார். இவர் தற்போது டாங்க்குரசை வைத்து இன்னும் பயிரிடாத படத்தை உருவாக்கி வருகிறார்.
விருது பெற்ற பின்பு டாம் க்ரூஸ் பேசுகையில், “சினிமா, என்னை உலகம் முழுவதும் அழைத்து செல்கிறது. வேறுபாடுகளை பாராட்டவும் மதிக்கவும் உதவுகிறது. அதே போல் நாம் பகிர்ந்து கொள்ளும் மனித நேயத்தையும் பல விஷயங்களில் நாம் ஒரே மாதிரியாக இருப்பதையும் காட்டுகிறது. நாம் எங்கிருந்து வந்தாலும் திரையரங்கில் ஒன்றாக சிரிக்கிறோம், அழுகிறோம், நம்புகிறோம். அதுதான் இந்தக் கலை வடிவத்தின் சக்தி. அது எனக்கு முக்கியமானது” என்றார். டாம் க்ரூஸ் இதுவரை நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷ் ஆகி பின்பு விருதுக்கு தேர்வாகாமல் இருந்துள்ளார். பின்பு அவர் திரைத்துறைக்கு வந்து 35 ஆண்டுகள் கடந்து இப்போது கௌரவ ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.