பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் வழங்கி வரும் இவ்விருதை தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் பெற்றுள்ளனர். இந்தியளவில் சத்யஜித் ரே, அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோர் வாங்கியுள்ளனர். 

Advertisment

இதன் வரிசையில் தற்போது கலை இயக்குநர் தோட்டா தரணி இணைந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னை அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ கையால் அவ்விருதினை பெற்றுக்கொண்டார் அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்த நிலையில் விருது பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “இந்த விருதை ஒரே ஒரு படத்திற்காக கிடைத்ததாக நினைக்கவில்லை. எல்லா டைரக்டர்களுமே என்னை என்கரேஜ் செய்தார்கள். அதே போல் எனக்கு அமைந்த டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் எனக்கு ஏதுவாக இருந்தார்கள்” என்றார்.  பின்பு அவரிடம் நீங்கள் பணியாற்றியதிலே மிகவும் சவாலான படம் எந்த படம் எனக் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு சவால் விடும் படங்கள் இன்னும் வரவில்லை” என்றார். 

தொடர்ந்து அவரது ஓவிய கண் காட்சி தொடர்பான கேள்விக்கு, “இந்த கண்காட்சியை ஃபிலிம் தீமில் அமைத்திருக்கிறேன். சிறுவயதில் நான் என் அப்பாவோடு இருந்த நினைவுகளை வைத்து உருவாக்கி இருக்கிறேன். இதை சினிமா துறையில் தரை துடைப்பவர்கள் முதல் டாப் மோஸ்ட் டைரக்டர்கள் வரை அனைவருkகும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

Advertisment

அடுத்து பெயிண்டிங் குறித்த கேள்விக்கு, “எண்ணம் வேகமாக இருந்தால் பெயிண்டிங்கும் மேகமாக முடிக்க முடியும். யோசித்துக் கொண்டே இருந்தால் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அந்த மாதிரி கேரக்டர் நான் கிடையாது. ஒரு விஷயம் யோசித்தால் அதில் என்னென்ன செய்ய முடியும் என்பதை பார்த்து உடனடியாக பெயிண்டிங்கை ஸ்டார்ட் பண்ணிவிடுவேன். எந்த பெயிண்டிங்காக இருந்தாலும் ஒரே சிட்டிங் தான்” என்றார். தொடர்ந்து இத்தனை வருட கரியரில் எது வேகமாக முடிக்கப்பட்ட செட் என்ற கேள்விக்கு,”30 வருஷம் முன்னாடி நான் போட்டது. அந்த செட்டை மதியம் யோசித்து உடனே வேலைகளை ஆரம்பித்து மறுநாள் மதியம் முடித்துவிட்டேன். இடையில் டீ சாப்பிடவும் டின்னர் சாப்பிடவும் மட்டும் தான் வெளியே வந்தேன்” என்றார்.