‘ஜெயிலர் 2’ படத்தை தொடர்ந்து ரஜினியின் புது படத்தை கமல் தயாரிப்பதாகவும் சுந்தர் சி இயக்குவதாகவும் அண்மையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. இந்த தகவல் வெளியான வேகத்திலேயே அப்படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
Advertisment
அருணாச்சலத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியை சுந்தர் சி இயக்க  இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு சுந்தர் சியின் அறிவிப்பால் அடங்கிப்போனது. இது கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலகல் குறித்து பலரும் யூடியூப் சேனல்களில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு பேசிவந்தனர்.
Advertisment
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசுகையில், ''ரஜினியுடன் சுந்தர் சி இணைவதாக அறிவிப்பு வருவதற்கு முன்பே சுந்தர் சி, மூக்குத்தி அம்மன்-2 மற்றும் விஷாலின் படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமானார். பெரிய நடிகரின் படத்திற்காக இந்த இரண்டு படங்களை விட்டுவிட்டு போனால் நன்றிகெட்டத் தனமாக இருக்கும். ஒரு பெரிய நடிகரின் படம் கிடைத்துவிட்டதால் இரண்டு படங்களை விட்டுவிட்டு சென்றதாகக் கூறுவார்கள். அதனால் தான் சுந்தர் சி விலகினார். அதேபோல ரஜினி கமலுடைய படம் என்றால் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் இருக்கும். அதற்கான கதை கிடைக்க வேண்டும். அப்படி ஒரு கதை கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக நேரம் எடுக்கும். மூன்று மாதத்திற்குள் படத்தை ஆரம்பிக்க வேண்டும் என சொல்லியதால் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் யூடியூப் சேனல்களில் பலர் தங்களுக்கு வாயில் வந்ததை அடித்து விடுகிறார்கள்'' என தெரிவித்துள்ளார்.