ஆரண்ய காண்டம் படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது வென்று கவனிக்கத்தக்க இயக்குநராக மாறினார் தியாகராஜன் குமாரராஜா. இப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை முதல் முறையாக வென்றிருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் பெரிதாக வெளிவரவில்லை. இடையில் குட் நைட் மணிகண்டனை வைத்து ஒரு படம் இயக்குவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிட் பட காம்போ மீண்டும் இணையவுள்ளதாக தெரியும் சூழலில் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Follow Us