தமிழ்த் திரையுலகில், உச்சம் தொட பல்வேறு நடிகர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது பல ஆண்டு காலமாக நடிகர்களுக்குள் நடந்து வரும் தொழில் போட்டியாகும். அந்த வகையில், ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த போன்ற பல்வேறு நடிகர்கள் தமிழ்த்துறையில் கோலோச்சி வந்தனர். அப்படியான நிலையில், திரைத்துறையில் தங்களுக்கென தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் பல்வேறு கதைக்களங்கள், கதாபாத்திரங்கள் பலதரப்பட்ட இயக்குனர்கள் எனத் தேர்ந்தெடுத்து தங்களது முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர். அதே காலகட்டத்தில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன்னுடைய எளிமையான நடிப்பு மற்றும் சாதாரணமான கிராமத்து கதைக்களத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர் தான் ராமராஜன். இவரது வளர்ச்சியானது அப்போதைய தமிழ் திரையில் உச்சபட்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல் போன்றோர்கள் கூட இவரது வளர்ச்சியைக் கண்டு வியந்து போகுமளவிற்கு இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியில் பயணித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ராமராஜன்.
இவரை நாடு முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்ததில் முக்கிய இடம் பிடித்தது 'கரகாட்டக்காரன்' படம் தான். கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் நகர்ப்புறம் , கிராமப்புறம் என பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நடிகை தேவிகாவின் மகளான கனகா கதாநாயகியாக நடித்துள்ளார். இது கனகாவிற்கு முதல் படம். முதல் படமே மயிரும் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சரத்குமார் போன்ற பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். இப்படியாக தமிழ்த் திரையில் தவிர்க்க முடியாத நாடியகையாக மாறினார். தொடர்ந்து, நடிப்பில் பிசியாக இருந்து வந்த கனகா 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் தனது தாயின் இறப்பிற்கு பின்பாக நடிப்பதிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/13/a-2026-01-13-19-22-38.jpeg)
அதன் பிறகு, கனகாவை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு நடிகை குட்டி பத்மினி நடிகை கனகாவை சென்று சந்தித்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அப்படத்தில் நடிகை கனகா மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்பட்டார். இப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, எப்படியிருந்த கனகா? இப்படி ஆயிட்டாங்களே என்று வருத்தம் தெரிவித்து வந்தனர். இப்படியான நிலையில் கரகாட்டக்காரன் படத்தின் பிரபல காதல் ஜோடி, 36 ஆண்டுகளுக்கு பிறகு முத்தையா - காமாட்சி ஜோடி (ராமராஜன் - கனகா) சென்னையில் ஒருசில தினங்களுக்கு முன்பு சந்தித்துள்ளனர். அந்தப் படம் சமூக வலைதளத்தில் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் கரகாட்டக்காரன் படத்தை நினைவுபடுத்தி, இவர்களை பாராட்டியும் வருகின்றனர்.
Follow Us