நடிகர் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

Advertisment

நிகழ்வில் பிரபாஸ் பேசியதாவது “என் அனைத்து ரசிகர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் ஜப்பானில் ரசிகர்களைச் சந்தித்தபோதும் நான் இதே மகிழ்ச்சியை உணர்ந்தேன். இன்று இங்கே உங்களைப் பார்க்கும் போது அதே சந்தோஷம் மீண்டும் வருகிறது. இன்று நான் உங்களுக்காக புதிய ஹேர் ஸ்டைலுடன் வந்திருக்கிறேன். அனில் தடானி எனக்கு ஒரு சகோதரரைப் போல. அவர் வட இந்தியாவில் என் படங்களை முழுமையாக ஆதரித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் அவர்களும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு காட்சியில் வந்தாலே அந்த முழுக் காட்சியும் அவருடையதாகிவிடும். இந்த படம் ஒரு பாட்டி – பேரன் கதையாகும். இந்த படத்தில் ஜரீனா வாஹப் என் பாட்டியாக நடித்திருக்கிறார். அவர் டப்பிங் பேசும் போது, என் காட்சிகளை மறந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். 

Advertisment

இந்த படத்தில் ரித்தி, மாளவிகா, நித்தி ஆகிய மூன்று நடிகைகளும் நடித்துள்ளனர். அவர்கள் மூவரும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் தமன். இப்படிப்பட்ட ஹாரர்–காமெடி படத்திற்கு அவர் சரியான தேர்வு. ஒளிப்பதிவாளர் கார்த்திக் படத்தை மிகவும் அழகாகப் படம் பிடித்துள்ளார். சண்டைக் காட்சிகளை ராம் லக்ஷ்மன் மற்றும் கிங் சாலமன் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத்.

படம் முதலில் திட்டமிட்டதை விட பெரியதாக மாறினாலும், அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இந்த படம் முழுவதும் அவரின் நம்பிக்கையால்தான் உருவானது. மாருதி பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், அவர் இந்த படத்தில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். அவர் எனக்கு ‘ரெபல் யுனிவர்சிட்டி’யில் பயிற்சி கொடுத்தவர் போன்றவர். இந்த படத்தை உருவாக்கும்போது அவர் காட்டிய உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாம் சொல்ல வார்த்தை இல்லை. இந்த படம் ஒரு ஹாரர்–காமெடி. அதே நேரத்தில் அது ஒரு உணர்ச்சி நிறைந்த படம். இந்த படத்தைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள், ரசிப்பீர்கள், மனம் நெகிழ்வீர்கள். இந்த சங்கராந்திக்கு வெளிவரும் எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில், ‘தி ராஜா சாப்’ ஒரு மிகப் பெரிய வெற்றியாக வேண்டும். நாளை ட்ரெய்லர் வெளியாகிறது – தவறாமல் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.” என்றார்

Advertisment