Advertisment

இளையராஜா கொடுத்த நவரத்தின மோதிரம்; இசையமைப்பாளர் பகிர்ந்த அனுபவம்!

15

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா.இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார் . ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் இயக்குநர்கள் கே எஸ் அதியமான்,  மனோஜ் குமார், ராஜ்கபூர் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஷரத் பேசும்போது, "ஏற்கெனவே நான் தமிழில் ஜூன் 6, 180 போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படம் வெளியாகுமா என்கிற  கேள்விக்குறி இருந்தது. இப்போது எல்லாம் கூடி வந்திருக்கிறது. இது ஒரு கனவு மாதிரி இருக்கிறது. இது கடவுளின் விருப்பம் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு திரைப்படம் உருவாக்குவதை விட அது வெளிவரும்போது தான் அது முழுமை பெறுகிறது. தமிழ்த் திரை உலகில் உள்ள எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா போன்றவர்களின் இசையைக் கேட்டு நான் வளர்ந்தவன் நான். மலையாளத்தில் இசையமைக்கும் போது கூட தமிழில்தான் டம்மி வரிகளை எழுதிக் கொள்வேன்.அப்படி ஒரு இனிமையான மொழி தமிழ் .எனக்கு தமிழ் மொழி மீது அன்பு பற்று பாசம் மதிப்பு மரியாதை உண்டு.

Advertisment

நான் இங்கே ஒரு படம் இசையமைத்தேன்.மெட்டு போட்டு பாடல்கள் வரிகள் எல்லாம் எழுதி சித்ரா, மனோ பாடினார்கள்.ஒலிப்பதிவும் செய்யப்பட்டு விட்டது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் நல்லவர் எப்போதும் பளபளவென்று ஜிப்பா போட்டிருப்பார். நான் எந்த இசைக் கருவியைத் தொட்டாலும், இசைத்தாலும் உடனே அவர் அற்புதம் என்று எனக்கு ஒரு உம்மா கொடுப்பார் அடுத்த கருவியைத் தொட்டால் இன்னொரு உம்மா கொடுப்பார்.இப்படி அவர் பல முத்தங்கள் கொடுத்தார். ஆனால் எல்லாம் முடிந்து சம்பளம் என்று வருகிறபோது அவர் ஆளைக் காணவில்லை .ஓடிப்போனவர் வரவே இல்லை. எனக்கு அப்படி ஒரு ஏமாற்றம் .அவர் எங்கிருக்கிறார் அவரைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது.நான் சாக முன்பு அவரைப் பார்த்துவிட வேண்டும் எனக்கு ஆஸ்கார் அவார்டு வாங்க வேண்டும் என்றோ ரஜினி சார் படத்தில் இசையமைக்க வேண்டும் என்றோ ஆசை இல்லை. அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும்.

நான் 180  திரைப்படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாது.அந்தப் படத்தின்  இயக்குநர் ஜெயேந்திரா சாதாரணமாகத் திருப்தி அடைய மாட்டார். அந்த படத்தில் நான் 180 மெட்டுகள் போட்டிருப்பேன். அந்த அனுபவம் மறக்க முடியாது.நான் இளையராஜா சாருடைய விசிறி இல்லை. புரப்பல்லர் என்றே சொல்ல வேண்டும் .அவர் இசையில் எல்லாம் பாட முடியுமா என்று நான் நினைப்பேன் .அது ஒரு கனவு போல இருந்தது. ஆனாலும் அது ஒரு நாள் நடந்தது. 'தாரை தப்பட்டை 'படத்தில் 'என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்'என்ற பாடலைப் பாடினேன். 

ஒரு நாள் நண்பர்கள் அழைத்த போது பிரசாத் ஸ்டுடியோ சென்றேன் அங்கே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.வேறு வேறு அறையில் இருந்து பாடினால் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே ஓடிவிடலாம். ஆனால் அவர் கண்ணெதிரே நின்று பாட வேண்டும் எனக்குப் பயமாக இருந்தது.இரண்டு முறை வாசித்துக் காட்டிப் பாட வைத்தார். பாடலைக் கேட்ட பிறகு இரண்டு முறை ஓட விட்டுப் பார்த்தார்.எனக்குப் பதற்றம்.அருகில் அழைத்து என் கன்னத்தைத் தடவினார்.இதுவரை நீ எங்கே இருந்தாய் என்றார் .அது மட்டுமல்ல என்னை அழைத்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.அது என் வீட்டில் இன்னும் இருக்கிறது. மறுநாள் அழைத்தார் .இசைக்கு எந்த விலையும் இல்லை பணம் கொடுக்க முடியாது தெரியுமா? என்றார். ஆமாம் அவரது இசையில் பாடியதற்குப் பணம் வாங்க முடியாது. வேறு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன் ,அடி கொடுத்தால் கூட சரி என்றேன். அவர் என் கையை விரித்து ஒன்று கொடுத்தார். அது ஒரு மோதிரம் அதுவும் நவரத்தின மோதிரம். எனக்கு அதைவிட வேறென்ன விருது வேண்டும்? ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது போல ஒரு மகிழ்ச்சியில் இருந்தேன். ஓ...என்று அழுதுவிட்டேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்தால் கூட அப்படி அழுது இருக்க மாட்டேன் அப்படி ஒரு அழுகை.அப்படியெல்லாம் அனுபவம் உள்ளது. என்றார்

ilayaraja music tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe