தமிழ்த்திரையுலகில் தன்னுடைய தனித்தனியான கதைகள் மற்றும் திரை மொழிகள் மூலமாக அழியாதப்  புகழைப் பெற்ற பல இயக்குநர்கள் இங்குண்டு. அந்த வகையில் தனது தனித்துவமான, வித்தியாசமான கதைகளைக் கொண்ட திரைப்படங்களை இயக்கி மக்களிடையே பிரபலமானவர் மிஸ்கின். இவரது படங்கள் அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு பெரும் வெற்றிகளை குவித்துள்ளன. அந்த வகையில் இவரது அஞ்சாதே, பொறியாளன், பிசாசு போன்ற படங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. 

Advertisment

தற்போது மிஸ்கின் இயக்கியுள்ள படம் "ட்ரெயின்". இதில் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன், நரேன் உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தை, பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஸ்ரீவத் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். 

Advertisment

தற்போது இந்த படத்தின் முதல் பாடலாக "கன்னங்குழிக்கார..." என்ற பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கபிலன் பாடல்  வரிகளை எழுத, மிஸ்கின் இசையமைக்க, ஸ்ருதிஹாசன் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்கின், விஜய் சேதுபதி இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் பெரும் வெற்றியடையும் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.