இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன். நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்பக் குழு விபரம் தயாரிப்பு - இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் இயக்குநர் - சிவனேசன், ஒளிப்பதிவு- M.S.நவீன்குமார். இசை - விபீன் R எடிட்டிங் - பிரேம் B கலை இயக்கம் - நீலகண்டன் ஸ்டன்ட் - யுனிவர்ஸ் ராஜேஸ். பாடல்கள் - மதன் கார்க்கி, விவேக், திருமாலி, அபிலாஷ் பிரிட்டோ. பாடியவர்கள் - GV பிரகாஷ், கார்த்திக், சைந்தவி, மாளவிகா சுந்தர், திருமாலி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/21/rej-movie-fisrst-lool-2025-12-21-18-05-45.jpg)