தமிழ்த்திரையுலகில் பொங்கல் வெளியீடாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் "பராசக்தி"யும் ஒன்று. இது அரசியல் வட்டாரத்திலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டப் படமாகும். காரணம், "1960 களின் காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதுமாகப் பற்றி எரிந்தது. மாணவர்கள் தெருக்களில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, தமிழ்நாட்டில் ராணுவப் படைகள் களமிறக்கப்பட்டது. அந்த அளவிற்கு மாணவர்கள், அரசியல் காட்சிகள் மற்றும் பொது மக்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்த போராட்டம் அது. அந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? 1950 களில் "இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும், இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்" என்று மத்திய அரசால் சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் கல்வியில் இந்தி மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.இந்த சட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது, "இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி வழி தேசிய இனங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், இது இந்தியைத் தவிர்த்து பிற மொழியாளர்களின் தாய் மொழியை அழிக்கும் செயல்" என்று தமிழ்நாட்டில் எதிர்ப்புக்குரல் எழுந்தது. இந்த எதிர்ப்பின், விளைவாக தமிழ் நாட்டில் வெடித்த போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் பராசக்தி.
இந்த படத்தில், சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீ லீலா போன்றவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 10 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இருப்பினும், தணிக்கை சான்று கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், படத்தின் சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கிய பின் தணிக்கைச் சான்று பெற்று, ஏற்கனவே அறிவித்திருந்த அதே தேதியில் (ஜனவரி 10) படம் வெளியானது. வெளியான நாள் முதலே இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நமது முன்னோர்களின் மொழிப்போர் குறித்த வரலாற்று சிறப்பு மிக்க படம், என்பதால் மக்கள் ஆர்வத்துடன் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவதால் இப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, படத்தில் நடித்த நடிகர்களுக்கும் இது அவர்களின் வாழ்நாளில் தவிர்க்க முடியாத முக்கிய படமாக அமைந்துள்ளது.
தற்போது, படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னையில் இன்று ‘பராசக்தி’ படகுழுவினரின், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், "நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் பராசக்தியை தேர்வு செய்தேன். ‘பராசக்தி’ படத்தில் நடித்தது எனது வாழ்நாள்பெருமை. சினிமாவிற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்தே படம் எடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/13/q-2026-01-13-19-18-20.jpeg)