Advertisment

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025; ஆங்கில ஆந்தம் பாடிய ஆண்ட்ரியா

18 (6)

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான ‘ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)’ பாடலின் ஆங்கில பதிப்பை பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். இப்பாடல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒருமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தைரியம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை கொண்டாடுகிறது. பாடலை நகுல் அபயங்கர் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் நஸீப் முகம்மது எழுதியுள்ளனர். 

Advertisment

ஆங்கில வரிகளுடன் இணைந்த ‘தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தோம்’என்ற இந்திய பாணி ஹுக் மற்றும் ‘தக் தக், வீ ப்ரிங் இட் ஹோம்’ என்ற உருக்கமான பல்லவி  இவை அனைத்தும் விளையாட்டின் இதயத் துடிப்பையும், வீராங்கனைகளின் உறுதியையும் பிரதிபலிக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நவம்பர் 2, 2025 அன்று நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான தயாரிப்பில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கீதம் போட்டிக்கும், மேலும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் மரபுக்கும் உலகளாவிய அங்கீகாரத்திற்கும் கௌரவம் சேர்க்கிறது.

Advertisment

இந்த பாடலை பாடியது குறித்து ஆண்ட்ரியா ஜெரேமியா கூறும்போது, “இது ஒரு பாடல் மட்டுமல்ல — பெரிய கனவு காணும், கடினமாகப் போராடும், வெற்றியை வீட்டுக்கு கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணிற்குமான கொண்டாட்டம்” என்றார்.

Andrea Jeremiah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe