Advertisment

திரையரங்கில் வெற்றி நடைபோடும் "தாய்க் கிழவி"; படக்குழுவினரைப் பாராட்டிய சீமான்!

WhatsApp Image 2026-03-02 at 4.18.03 PM

ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "தாய்க்கிழவி". ராதிகாவின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளியாகியுள்ள இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இப்படத்தை சிவகுமார் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார். இது இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில், சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.    

Advertisment

வெளியாவதற்கு முன்பே இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படம், வெளியான நாள் முதலே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் மட்டும்  2.5 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இன்றளவும் வெற்றிகரமாக இப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தைப் பல பிரபலங்களும் பாராட்டிவருகின்றனர். 

Advertisment


அந்த வகையில், தாய்க் கிழவி படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன், ராதிகா உள்ளிட்ட படக்குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.  இந்த படத்தைப் பார்த்த சீமான், இப்படம் குறித்து நேர்மறையான வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.  இது குறித்த வீடியோவை சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor sivakarthikeyan seeman rathika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe